Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓடு இடிந்து விழுந்த விபத்தில் தக்க நேரத்தில் உதவி புரிந்த தீயணைப்பு வீரர்கள்

ஓடு இடிந்து விழுந்த விபத்தில் தக்க நேரத்தில் உதவி புரிந்த தீயணைப்பு வீரர்கள்

By: Nagaraj Mon, 09 Nov 2020 08:06:12 AM

ஓடு இடிந்து விழுந்த விபத்தில் தக்க நேரத்தில் உதவி புரிந்த தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் பாராட்டு... தி.நகரில், மூன்றாவது மாடியில் இருந்து திடீரென ஓடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் தக்க நேரத்தில் உதவிய, தீயணைப்பு வீரர்களுக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை, தி.நகர் சாகுல்லா தெருவில் குடும்பத்துடன் வசிப்பவர், கோபால சுந்தரம் (76). இவரது வீட்டின், மூன்றாவது மாடியில் வேயப்பட்டு இருந்த, ஓடுகள் திடீரென நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், சரிந்து விழுந்தன.அப்போது, வீட்டின் உள்ளே நடந்து சென்ற கோபால சுந்தரம் அதிர்ஷ்டவசமாக, ஓடு விழுந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

இல்லையென்றால் விபத்தில் சிக்கி இருப்பார். இப்படி அசாதாரண சூழ்நிலையில், தீயணைப்பு துறை காவல் கட்டுப்பாட்டு எண், 101க்கு தொடர்பு கொண்டு விபத்து குறித்து தெரிவித்தார்.

firefighters,people,praise,timely,help ,தீயணைப்பு வீரர்கள், மக்கள், பாராட்டு, சரியான நேரம், உதவி

இந்த தகவல் தி.நகர், தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, தி.நகர் லீடிங் பயர் மேன் சேகர் மற்றும் ஓட்டுனர் மாரிச்செல்வம் உள்ளிட்ட, ஆறு பேர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான அறையில் அமரச்செய்தனர்.

பின், மிகச்சிறப்பாக செயல்பட்டு, தங்கள் வசம் இருந்த, 'டார்ச் லைட்' உதவியுடன், மூன்றாவது மாடியில், சதுரடி வடிவில் இருந்த உடைந்த ஓடுகளை அப்புறப்படுத்தினர். தாமதம் ஏதுமின்றி தக்க நேரத்தில் உதவிய தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
|
|
|