Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திராயன் 3 அனுப்பிய முதல் காட்சிகள்: சந்திரனை நெருங்கியது

சந்திராயன் 3 அனுப்பிய முதல் காட்சிகள்: சந்திரனை நெருங்கியது

By: Nagaraj Mon, 07 Aug 2023 07:22:38 AM

சந்திராயன் 3 அனுப்பிய முதல் காட்சிகள்: சந்திரனை நெருங்கியது

புதுடில்லி: சந்திராயன் 3 அனுப்பிய காட்சிகள்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவு குறித்தான முதல் காட்சிகள் சிலவற்றை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
படிப்படியாக சந்திரனின் தூரத்தைக் குறைக்கும் பணியில் திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று சந்திரயான் 3 விண்கலத்தை உள்வட்டப் பாதையில் உந்தி செலுத்தி சந்திரனை நெருங்கவைத்தனர்

 ,
சந்திராயன், இந்தியா, காட்சிகள், நிலவின் மேற்பரப்பு, வெற்றி

சந்திராயன் விண்கலம் இப்போது நிலவுக்கு 4 ஆயிரத்து 300 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மீண்டும் இதுபோன்ற திட்டமிட்ட முன்னகர்வு நாளை பிற்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் 3 நிலவில் இறங்கி ஒரு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் ஒருநாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு நிகரானது.

சந்திரயான் 2 நிலவில் இறங்கி சேதம் அடைந்ததையடுத்து சந்திரயான் 3 திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ரஷ்யா சீனாவைத் தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரனில் கால்பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது

Tags :