Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.1,049 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நன்றி

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.1,049 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நன்றி

By: Karunakaran Mon, 10 Aug 2020 3:46:58 PM

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.1,049 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நன்றி

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ், 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த திட்டம் செலுத்தப்படுகிறது.

தற்போது கர்நாடகத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் 52½ லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

prime minister,eduyurappa,modi,karnataka farmers ,பிரதமர், எடியூரப்பா, மோடி, கர்நாடக விவசாயிகள்

முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு சுமார் 52½ லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதற்கட்ட நிதி உதவி வழங்க நிதி ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கர்நாடகத்தில் 52½ லட்சம் விவசாயிகள், அவரது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் முதற்கட்ட நிதி உதவியாக ரூ.1,049 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|