Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு

By: Karunakaran Thu, 09 July 2020 11:19:40 AM

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாக இல்லாததால், கொரோனா பாதித்தவர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் கடும் அவதியடைந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில்கொரோனா கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படுவது மற்றும் படுக்கைகளை நிர்வகிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

karnataka,coronavirus,corona test,yeddyurappa ,karnataka,coronavirus,corona test,Yeddyurappa

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மந்திரி சுதாகர் அளித்த பேட்டியில், கொரோனா கண்காணிப்பு மையங்களில் படுக்கைகள் குறித்து முதல்-மந்திரிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2,000 படுக்கைகளுடன் கொரோனா கண்காணிப்பு மையம் ஏற்கனவே பணியை தொடங்கிவிட்டது என்று கூறினார்.

மேலும் அவர், முதல்-மந்திரி, கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக அமல்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் எங்களிடம் கூறினார் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Tags :