Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி ஷாகர் பஸ்த் ரெயில் நிலைய ரெயில் பெட்டி தனிமை வார்டில் முதல் நோயாளி அனுமதி

டெல்லி ஷாகர் பஸ்த் ரெயில் நிலைய ரெயில் பெட்டி தனிமை வார்டில் முதல் நோயாளி அனுமதி

By: Karunakaran Thu, 25 June 2020 5:30:41 PM

டெல்லி ஷாகர் பஸ்த் ரெயில் நிலைய ரெயில் பெட்டி தனிமை வார்டில் முதல் நோயாளி அனுமதி

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரெயில்வே துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு 500 ரெயில்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி ஷாகர் பஸ்த் என்ற ரெயில்நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை வார்டாக ரெயில் பெட்டிகள் மாற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

delhi,shakar railway,corona ward,corona virus ,டெல்லி, ஷாகர் பஸ்த் ரெயில் நிலையம்,தனிமை வார்டு,கொரோனா வைரஸ்

தற்போது முதன் முறையாக இந்த தனிமை வார்டில்கொரோனா இருப்பதாக சந்தேகப்படும் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாகவும், மேலும் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் மாவ் ரெயில்நிலையத்திலும் 59 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி ஷாகர் பஸ்த் ரெயில் நிலையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதல் நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|