Advertisement

மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை தொடக்கம்

By: vaithegi Thu, 28 Sept 2023 09:33:08 AM

மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை தொடக்கம்


சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டு வருகின்றன. இச்சூழலில் செப்டம்பர் மாதம் 2-ம் வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. இதற்கு இடையே முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

1-3ம் வகுப்புகளுக்கு செப்.23 - அக்.2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும், 4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 - அக்.2 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும்பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

quarterly vacation,schools ,காலாண்டு விடுமுறை ,பள்ளிகள்

1 முதல் 5 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதிக்கு பதிலாக 9 -ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து 2 கட்டங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் காலாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வருகிற அக்.8 வரை காலாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது.

Tags :