Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காணாமல் போன 300 ஆண்டுகள் தமிழின் முதல் பைபிள் கிடைத்தது..

காணாமல் போன 300 ஆண்டுகள் தமிழின் முதல் பைபிள் கிடைத்தது..

By: Monisha Fri, 01 July 2022 9:54:52 PM

காணாமல் போன 300  ஆண்டுகள் தமிழின் முதல் பைபிள் கிடைத்தது..

சென்னை: 2005இல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது.
பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலைமையும் இருந்தது.

இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்காமல் உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்பு மற்ற மொழிகளில் இது பெயர்க்கப்பட்டது.

bible,tamil,english,disappearance ,சிபிசிஐடி ,பிரிவு,பைபிள்,தமிழ்,

முதன் முதலில் பனை ஓலையில், ஆணிகள் மூலம் இந்த பைபிள் எழுதப்பட்டது. அதன்பின் பிரிண்ட் முறை மூலம் இது பிரிண்ட் புத்தகமாக வெளியிடப்பட்டது. முதன் முதலில் 1711ல் பைபிள் முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழயில் பெயர்க்கப்பட்ட முதல் பைபிளாக தமிழ் புதிய ஏற்பாடு பைபிள் மாறியது.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பல ஆண்டுகளாக இந்த பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி நூலகத்தில் இருந்து பைபிள் காணமல் போனது. அந்த பைபிள் எங்கே போனது என்ற கேள்வி எழும்பியது. இது குறித்து செய்தி தெரியாமல் போனது.தேடலும் நின்று போனது . இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பைபிள் புத்தகம் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு சிஐடி இந்த பைபிள் லண்டனில் மன்னர் குடும்ப சொத்துகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது லண்டன் சென்றது எப்படி என்று விசாரித்து வருகின்றனர்..

Tags :
|
|