Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் காவிரி கரையோர பகுதியில் மயங்கிய நிலையில் ஒதுங்கிய மீன்கள்

மேட்டூர் காவிரி கரையோர பகுதியில் மயங்கிய நிலையில் ஒதுங்கிய மீன்கள்

By: Nagaraj Sat, 13 June 2020 8:36:52 PM

மேட்டூர் காவிரி கரையோர பகுதியில் மயங்கிய நிலையில் ஒதுங்கிய மீன்கள்

மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்... மேட்டூர் காவிரி கரையோர பகுதிகளில் திடீரென டன் கணக்கில் மீன்கள் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டு வினாடிக்கு 10,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இத்தண்ணீர் அணையையொட்டி உள்ள அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் ஏற்கெனவே காவிரியில் தேங்கி நிற்கும் நீருடன் கலந்து வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.


fishes,durawadi,drowsiness,mettur,people ,மீன்கள், துர்வாடை, மயங்கிய நிலை, மேட்டூர், மக்கள்

இதனால் அணையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளான காவேரிகிராஸ் முதல் செக்கானூர் கதவை மின் நிலையம் வரை மீன்கள் திடீரென டன் கணக்கில் மயங்கிய நிலையில் கரையில் ஒதுக்குகின்றன. இதனைக் கரையோர மீனவர்கள் மற்றும் பொது மக்கள் அள்ளிச்செல்கின்றனர்.

எஞ்சிய மீன்கள் ஆங்காங்கே கரை ஒதுங்கிக் கிடக்கின்றன. கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் துர்வாடையால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|