Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல்

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல்

By: Nagaraj Thu, 16 Nov 2023 12:01:51 PM

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல்

சென்னை: தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

fishing,fishermen,low pressure ,மீன்பிடிக்க ,மீனவர்கள் ,குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை

எனவே இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதாவது மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கீழக்கரை, ஏர்வாடி, சோளியங்குடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :