Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை

இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை

By: vaithegi Wed, 19 Oct 2022 7:03:28 PM

இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை

சென்னை: 19.10.2022: மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து 20.10.2022: தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.10.2022: தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

fishermen,beware ,மீனவர்கள் ,எச்சரிக்கை


அதைத்தொடர்ந்து 22.10.2022: தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் 23.10.2022: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :