Advertisement

இன்று பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Fri, 14 July 2023 09:54:54 AM

இன்று பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: மீனவர்கள் மீன்பிடிக்க தடை ... ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று பிற்பகல் 2:35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. சந்திராயன் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியது.

மேலும் அத்துடன் விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டன் நேற்று பிற்பகல் தொடங்கியது. எனவே அதன்படி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் சந்திராயன் 3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.

fishermen,chandrayaan 3 spacecraft ,மீனவர்கள் , சந்திராயன் 3 விண்கலம்

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 3 விண்கலம் இன்று ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவப்பட உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து அதன்படி இன்று பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான சந்திராயன் 3 வானில் ஒரு மாத பயணத்திற்கு பின் ஆகஸ்ட் மாதத்தில் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :