Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் .. மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம்

கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் .. மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம்

By: vaithegi Thu, 17 Nov 2022 10:25:24 AM

கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் ..  மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம்

சென்னை: மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல் .... நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை மிகவும் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

fishermen,hurricanes ,மீனவர்கள் ,சூறைக்காற்று

மேலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .

இதையடுத்து வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்று மீன்வளத்துறை தரப்பில் அறிவுறுத்தபட்டுள்ளது.

Tags :