Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பலத்தக்காற்று .. இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

பலத்தக்காற்று .. இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

By: vaithegi Fri, 26 Aug 2022 4:01:58 PM

பலத்தக்காற்று    ..   இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மீனவர்களுக்கான எச்சரிக்கை:

26.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதையடுத்து 27.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

fishermen,strong winds,beware ,மீனவர்கள் ,பலத்தக்காற்று,எச்சரிக்கை

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் 28.08.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில்| வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :