Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூறாவளிக்காற்று வீசக்கூடும் ... மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சூறாவளிக்காற்று வீசக்கூடும் ... மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Wed, 21 Dec 2022 2:07:02 PM

சூறாவளிக்காற்று வீசக்கூடும்    ...  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: மீனவர்களுக்கான எச்சரிக்கை: 21.12.2022 , 22.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து 23.12.2022, 24.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவித்துள்ளது.

fishermen,hurricanes ,மீனவர்கள் ,சூறாவளிக்காற்று

அதனை தொடர்ந்து 25.12.2022: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..

Tags :