Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Tue, 04 Oct 2022 09:53:17 AM

அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் ... தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதி மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து லட்சத்தீவு குமரிக்கடல், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

ஆகவே அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என தெரிவித்திருக்கிறது.

meenavar,meteorological centre ,மீனவர்கள் ,வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என தெரிவித்திருக்கிறது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்திருக்கிறது .

மேலும் அதே நேரம் லட்சத்தீவு குமரிக்கடல் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். ஆகவே அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Tags :