Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

By: vaithegi Sun, 23 Oct 2022 7:31:01 PM

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்


இந்தியா: இந்த கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் .... மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இடத்தை அடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று 08.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

fishermen,india ,மீனவர்கள் ,இந்தியா

மேலும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பின் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

எனவே இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல். ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :