Advertisement

மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் தொடக்கம்

By: vaithegi Fri, 14 Apr 2023 12:49:16 PM

மீன்பிடி தடைக்காலம் நாளை முதல் தொடக்கம்

சென்னை : தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் நாளை முதல் தொடங் குகிறது. இதையடுத்து அடுத்த 2 மாதங்களுக்கு 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாது ...

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

எனவே மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

fishing prohibition,ministry of fisheries ,மீன்பிடி தடைக்காலம்,மீன்வளத் துறை அமைச்சகம்

இதனை அடுத்து அதன்படி தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 14 வரை இந்த தடை அமலில் இருக்கும்.

இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத் துக்குடி, ராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும். இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர்.

Tags :