Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்ஜியாவில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

ஜார்ஜியாவில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 06 June 2020 1:22:52 PM

ஜார்ஜியாவில் சிறிய ரக விமானம் தீப்பிடித்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று மாலை சிறிய ரக விமானத்தில் உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இண்டியானாவுக்கு சென்றனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மற்றும் பைலட் என 5 பேர் பயணம் செய்தனர்.

ஜார்ஜியா வான்பகுதியில் சென்றபோது, இந்த விமானம் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

georgia,air crash,united states,5 people dead ,ஜார்ஜியா,விமான விபத்து,அமெரிக்கா,5 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் ஏற்பட்டுள்ளது. அங்கு அருகில் இருந்த வயல்வெளிகளில் விமான பாகங்கள் சிதறி கிடந்தன.

இந்த விபத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர், விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டு, பின்னர் தீப்பிடித்து விழுந்ததாக கூறினார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :