Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு

நேபாளத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு

By: Nagaraj Sun, 11 Sept 2022 1:09:25 PM

நேபாளத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு

நேபாளம்: மேக வெடிப்பால் திடீர் வெள்ளம்... நேபாளம், தாா்சுலா மாவட்டத்தில் சனிக்கிழமை மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் அங்கு கனமழை பெய்து வந்ததால் மஹாகாளி, லாஸ்கு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் இரண்டு போ் சிக்கி உயிரிழந்தனா். மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி மூன்று போ் உயிரிழந்தனா். 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. 7 போ் காணாமல்போய் உள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

காணாமல் போனவா்களை நேபாள போலீஸாரும், ராணுவத்தினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரியில் சிக்கியவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் பாயும் மகாகாளி நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால், உத்தரகண்ட் கோட்டிலா கிராமத்தில் வெள்ளநீரில் சிக்கி பெண் ஒருவா் பலியானாா்.

cloudburst,nepal,relief work,disaster response force,police ,மேக வெடிப்பு, நேபாளம், நிவாரணப்பணி, பேரிடர் மீட்பு படை, காவல்துறை

கோட்டிலா கிராமம், காளி நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வீடுக்குள் புகுந்த சேறுடன் கலந்த வெள்ள நீரில் சிக்கி பெண் ஒருவா் பலியானாா். 36 வீடுகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது. கிராமத்தில் பாதிக்கப்பட்ட 170 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளநீரில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மாநில பேரிடா் மீட்பு படை மற்றும் காவல் துறையினா் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனா். எல்லையை ஒட்டிய நேபாள பகுதியில் அமைந்துள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags :
|