Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவில் சென்னை – ராமநாதபுரம் இடையே விமான சேவை தொடங்கப்படும்

விரைவில் சென்னை – ராமநாதபுரம் இடையே விமான சேவை தொடங்கப்படும்

By: vaithegi Thu, 02 Feb 2023 6:54:53 PM

விரைவில் சென்னை – ராமநாதபுரம் இடையே விமான சேவை தொடங்கப்படும்

சென்னை: இந்தியாவில் பிரதமர் மோடி முக்கிய நகரங்களை இணைக்கும் முயற்சியாக வந்தே பாரத் எனும் விரைவு ரயில் திட்டத்தை கொண்டு வந்தார். இதையடுத்து தற்போது முக்கிய நகரங்களுக்கு 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “உதான்” எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

chennai,ramanathapuram,flight service ,சென்னை ,ராமநாதபுரம்,விமான சேவை

இத்திட்டத்தின் கீழ் விமான சேவை இல்லாத சிறிய நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. முதல் முதலில் சிம்லா – டெல்லி, கடப்பா – ஹைதராபாத் நந்தேட்- ஹைதராபாத் போன்ற வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 50 விமான நிலையங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் சென்னை- ராமநாதபுரம் இடையே விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags :