Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பலத்த மழை காரணமாக சென்னையில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பலத்த மழை காரணமாக சென்னையில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள்

By: vaithegi Mon, 19 June 2023 09:29:12 AM

பலத்த மழை காரணமாக சென்னையில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சென்னை : சென்னைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் பெங்களூரூக்கு திருப்பி விடப்பட்டன .... சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மேலும் சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது.

இதையடுத்து மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

flights,chennai ,விமானங்கள்,சென்னை


எனவே இதன் காரணமாக , இன்று அதிகாலையிலிருந்து Ek-542-துபாய், QR-528-தோகா, EY-268-அபுதாபி, BA-35-லண்டன், G9-471-சார்ஜா, FZ-447-துபாய், AI-274-கொழும்பு, 6E1002-சிங்கப்பூர், 6E-1278-மஸ்கட், AI-906-துபாய் உட்பட 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமிட்டு பறந்தன. ஆனால் வானிலை சீரடையாததால் பின்பு அந்த விமானங்கள் பெங்களூருக்கு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

அதேபோன்று சென்னையிலிருந்து டெல்லி, அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், லண்டன், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெரிவித்தனர்.

Tags :