Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓமனிலிருந்து வரும் 8ம் தேதி முதல் டில்லி, மும்பை, கொச்சினுக்கு விமான சேவை

ஓமனிலிருந்து வரும் 8ம் தேதி முதல் டில்லி, மும்பை, கொச்சினுக்கு விமான சேவை

By: Nagaraj Tue, 06 Oct 2020 9:24:41 PM

ஓமனிலிருந்து வரும் 8ம் தேதி முதல் டில்லி, மும்பை, கொச்சினுக்கு விமான சேவை

விமான சேவை தொடக்கம்... ஓமனில் இருந்து இந்திய நகரங்களான டில்லி, மும்பை மற்றும் கொச்சினுக்கு அக்டோபர் 8 முதல் விமான சேவையை தொடங்குவதாக ஓமன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஓமன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அக்டோபர் 8ம் தேதி முதல் ஓமனிலிருந்து தில்லிக்கு திங்கள்கிழமையும், தில்லியில் இருந்து ஓமனுக்கு புதன்கிழமையும் விமான சேவை இயக்கவுள்ளது.

airlines,schedules,oman,india,mumbai ,விமான சேவை, அட்டவணை, ஓமன், இந்தியா, மும்பை

ஓமனிலிருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமையும், அங்கிருந்து ஓமனுக்கு வியாழக்கிழமையும் விமான சேவை அறிவித்துள்ளனர். மஸ்கட்டிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும், மஸ்கட்டுக்கு வியாழக்கிழமையும் இயக்க உள்ளனர்.

மேலும் இந்த அட்டவணையின்படி, அக்டோபர் 8 முதல் 24 வரை விமான சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|