Advertisement

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

By: vaithegi Wed, 14 Dec 2022 9:02:27 PM

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை .... மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே மேகமூட்டமும் பனிமூட்டமும் காணப்பட்டது குளிர்ந்த சூழல் நிலவியது. மெல்லிய சாரல் மழை வெற்றி விட்டு தூறி வந்தது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது.

courtalam,flood ,குற்றாலம் ,வெள்ளப்பெருக்கு

இதனை அடுத்து இந்த மழை சுமார் 20 நிமிடம் பெய்தது. இதைத்தொடர்ந்து மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையே வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :