Advertisement

கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

By: Nagaraj Wed, 14 Oct 2020 08:58:54 AM

கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கனமழையால் வெள்ளப்பபெருக்கு... சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

courtallam falls,bathing ban,flooding,travelers ,குற்றால அருவி, குளிக்க தடை, வெள்ளப்பெருக்கு, பயணிகள்

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உண்டாகியுள்ளது.
இதனால் நீரானது சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற ரம்மியமான அந்த காட்சியை சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :