Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மல்லிகைப்பூ சீசன் தொடக்கம் .. மதுரை பூ மார்க்கெட்டுகளுக்கு பூ வரத்து உயர்வு

மல்லிகைப்பூ சீசன் தொடக்கம் .. மதுரை பூ மார்க்கெட்டுகளுக்கு பூ வரத்து உயர்வு

By: vaithegi Sat, 29 Apr 2023 11:30:13 AM

மல்லிகைப்பூ சீசன் தொடக்கம்    ..  மதுரை பூ மார்க்கெட்டுகளுக்கு பூ வரத்து உயர்வு

மதுரை : தமிழகம் முழுவதும் மல்லிகைப் பூக்கள் பரவலாக விளைவிக்கப்பட்டாலும் மதுரை மல்லிகைக்கு தனி மனமும், நிறமும் உண்டு. அதனாலே, மற்ற ஊர் மல்லிகைப் பூக்களிலிருந்து மதுரை மல்லிகைப்பூ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மவ்லும் மதுரையில் விளையும் மல்லிகைப்பூ, வெளிநாடுகளில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதியாகிறது. அதுபோன்று, தமிழகத்தின் பிற மாவட்ட பூ மார்க்கெட்டுகளுக்கும் மதுரை மல்லிகைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படி, ஆண்டு முழுவதுமே உள்ளூர் சந்தை முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிகைப் பூக்களுக்கு அதிக வரவேற்பு உண்டு.

poo varattu,madurai,jasmine , பூ வரத்து ,மதுரை ,மல்லிகைப்பூ


இதையடுத்து உள்ளூர் சந்தைகளில் திருவிழா காலங்களில் மல்லிகை பூ விலை கடுமையாக உயரும். 1 கிலோ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கூட விலை உயரும். மதுரை மாவட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி வட்டாரங்களில் அதிகளவு மல்லிகைச் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

மேலும் பொதுவாக மல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி தொடங்கி செப்டம்பரில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள் அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும். தற்போது மல்லிகைப்பூ சீசன் தொடங்கிவிட்டதால் மதுரை மாவட்ட பூ மார்க்கெட்டுகளில் மதுரை மல்லிகைப்பூக்கள் வரத்து அதிகமாக உள்ளது.


Tags :