Advertisement

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

By: Nagaraj Sat, 22 July 2023 6:46:23 PM

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

திருச்சி: பூக்கள் விலை உயர்வு... திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆடி மாதங்களில் திருவிழா, சிறப்பு வழிபாடுகள் என்று கோயில்களில் தினம் தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் சிறப்புக்கு உரிய நாட்களாகும். இதனால் அந்த நாட்களில் கோயிலுக்கு செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இதனால் ஆடி மாதங்களில் பூக்களினுடைய விலை உயர்வது இயல்பு தான் என்றாலும், தற்போது பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

rising prices,flowers,traders,scarcity,headwinds ,விலை உயர்வு, பூக்கள், வியாபாரிகள், தட்டுப்பாடு, ஆடிக்காற்று

திருச்சி மாவட்டத்தில் மல்லிகை உற்பத்தி முக்கிய விவசாய நடவடிக்கையாகும். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மல்லிகை 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, பிற மாவட்டங்களில் 500 ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது.

முல்லை 500 ரூபாய் முதல் 550 ரூபாய் வரையும், ஜாதிமல்லி 600 முதல் 650 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும். இவை கடந்த மாதங்களில் 150, 200, 300 என்ற வீதத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்போது விலை உயர்ந்து இருக்கிறது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும் சம்மந்தி, வாடாமல்லி, தாமரை, ரோஜா, பன்னீர் ரோஜா, முல்லை, செண்டுமல்லி, பட்ரோஸ், ஜாதிமல்லி, கதம்பம், செவ்வந்தி, அரளி போன்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆடி மாதங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது பருவமழை சரியாக பெய்யாததும், ஆடியில் அடிக்கக்கூடிய காற்றால் பூக்களை பறிப்பதற்கு முன்பே உதிர்ந்து விடுவதும், தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் விலை உயர்வு காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :