Advertisement

கோவையில் 'ஃபுளு காய்ச்சல்' வேகமாக பரவி வருகிறது

By: vaithegi Wed, 22 Nov 2023 11:15:49 AM

கோவையில் 'ஃபுளு காய்ச்சல்' வேகமாக பரவி வருகிறது

கோவை: தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் , பருவநிலை மாற்றம் காரணம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் என்று எளிதில் பரவக்கூடிய நோய்கள் அதிகமாகியுள்ளன. எனவே இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து கோவையில், தற்போது ஃபுளு காய்ச்சல் பரவல் என்பது சற்று அதிகரித்துவுள்ளது என்றும், தினசரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.

flu,coimbatore ,ஃபுளு காய்ச்சல்,கோவை


மேலும் இந்த புளு காய்ச்சலானது சுவாசகுழாய் வழியாக, அதாவது ஒருவர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இதன் காரணமாக கோவையில் பொதுவெளியில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாரும், கடைகளில் தாமாக மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|