Advertisement

திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை

By: vaithegi Fri, 06 Oct 2023 10:09:29 AM

திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை


தஞ்சாவூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை ஒட்டி டிரோன்கள் பறக்க தடை ... தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சை செல்கிறார். இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சிக்கு செல்லும் அவர்,

பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சை செல்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பின்னர் மாலை 6:30 மணி அளவில் புறப்பட்டு திருச்சிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து விமான மூலம் சென்னை வருகிறார்.

drones,trichy ,டிரோன்கள் ,திருச்சி


இந்த நிலையில் திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சென்னையிலிருந்து திருச்சி வழியாக முதல்வர் ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். பாதுகாப்பு கருதி, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :
|