Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூடலூர் பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம்... வாகன ஓட்டுனர்கள் அவதி

கூடலூர் பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம்... வாகன ஓட்டுனர்கள் அவதி

By: Nagaraj Sat, 12 Nov 2022 4:34:32 PM

கூடலூர் பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம்... வாகன ஓட்டுனர்கள் அவதி

நீலகிரி: கூடலூர் பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டத்தால் நிலவும் கடும் குளிர் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. வாகன ஓட்டுனர்களும் சிரமமடைந்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

northeast monsoon,rains,tamil nadu,widespread, ,கனமழை, தமிழகத்தில், பருவமழை, வடகிழக்கு

இதனிடையே கூடலூர் பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டத்தால் நிலவும் கடும் குளிர் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. குறிப்பாக மலை பகுதிகளில் உள்ள சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்து கானப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். அத்துடன் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனம் ஓட்டி வருகின்றனர்.

Tags :
|