Advertisement

தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்

By: Nagaraj Thu, 24 Aug 2023 6:41:20 PM

தஞ்சையில் நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் ஊர்வலத்தினை நீலகிரி பஞ்சாயத்து தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலமையேற்று தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், இந்திய அரசு, கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிலையில் உலக நாட்டுப்புற தின கலை விழா தென்னகப் பண்பாட்டு மையத்தின் உறுப்பு மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும், தஞ்சாவூர் தலைமையகத்திலும் நடைபெற்றது.

அதன்படி தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் சுமார் 150-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் ஊர்வலத்தினை நீலகிரி பஞ்சாயத்து தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலமையேற்று தொடக்கி வைத்தார். மத்திய மாநில அரசு விருது பெற்ற மூத்த தெருகூத்து கலைஞர் கலைமாமணி புரசை சுப்பிரமணிய தம்பிரான் கலந்து கொண்டார்.

southern culture,center,performers,parade,performance ,தென்னகப்பண்பாட்டு, மையம், கலைஞர்கள், ஊர்வலம், கலை நிகழ்ச்சி

இதில் தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆலோசகர் நிர்வாக பிரிவு கிருஷ்ணமூர்த்தி, நிகழ்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் தஞ்சாவூர் ஈஸ்வரி நகரிலிருந்து புறப்பட்டு தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வந்தடைந்தது. பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட கலைஞர்கள் தென்னகப் பண்பாட்டு மையத்தில் அமைந்துள்ள பிரகதீஷ்வரர் கலா மண்டபத்தில் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது. தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags :
|
|