Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களே ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்காம்... வானிலை மையம் எச்சரிக்கை

மக்களே ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்காம்... வானிலை மையம் எச்சரிக்கை

By: Nagaraj Fri, 28 Oct 2022 9:25:12 PM

மக்களே ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்காம்... வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை நாளை துவங்க உள்ள நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானில ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

met office,warning,heavy rain,kanchipuram,tamil nadu ,வானிலை மையம், எச்சரிக்கை, கனமழை, காஞ்சிபுரம், தமிழ்நாடு

கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tags :