Advertisement

மக்களே இன்று இந்த 10 மாவட்டங்களில் மழை

By: vaithegi Sun, 02 Apr 2023 10:51:48 AM

மக்களே இன்று இந்த 10 மாவட்டங்களில் மழை

சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rainy,chennai ,மழை ,சென்னை

கடந்த இரு வாரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால், இதமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும், சில மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.
அடிக்கிற வெயிலுக்கு மழை பெய்தால் நல்ல இருக்கும் என்று நினைப்பீர்கள். ஆம், இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி, தமிழகத்தின் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை தருமபுரி, ஈரோடு, சேலம், கடலூர், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|