Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி விலை அதிகரிப்பை தொடர்ந்து சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

தக்காளி விலை அதிகரிப்பை தொடர்ந்து சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

By: vaithegi Tue, 04 July 2023 10:44:48 AM

தக்காளி விலை அதிகரிப்பை தொடர்ந்து சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

சென்னை:இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை .... தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சலும், வரத்தும் உயரும் போது தக்காளியின் விலை குறைந்து காணப்படும். தக்காளியின் விளைச்சல் , வரத்து குறையும் போது தக்காளி விலை உச்சத்தை பெறுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் என்பது தற்போது குறைந்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வர வேண்டிய தக்காளி வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதன் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இன்று விலையில் மாற்றமின்றி 1 கிலோ தக்காளி 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

tomato,ration shop ,தக்காளி ,ரேஷன் கடை

இந்த நிலையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிலோ தக்காளி 120 வரை விற்கப்படும் நிலையில் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வடசென்னையில் 32 கடைகள் , மத்திய சென்னை 25 கடைகள் , தென்சென்னை 25 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
|