Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு மேஜை... கயிறு கட்டி கூடையில் உணவு; சமூக விலகலை மையப்படுத்தி அசத்தும் ஸ்வீடன் ஓட்டல்

ஒரு மேஜை... கயிறு கட்டி கூடையில் உணவு; சமூக விலகலை மையப்படுத்தி அசத்தும் ஸ்வீடன் ஓட்டல்

By: Nagaraj Wed, 13 May 2020 08:33:44 AM

ஒரு மேஜை... கயிறு கட்டி கூடையில் உணவு; சமூக விலகலை மையப்படுத்தி அசத்தும் ஸ்வீடன் ஓட்டல்

ஒரு மேஜை... கயிறு கட்டி பிக்னிக் கூடையில் உணவு என்று சமூக விலகலை மையப்படுத்தி செயல்படும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலின்றி, சமூக விலகலை மையப்படுத்தி செயல்பட்டு வரும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

a table,food in the basket,sweden,social exclusion,welcome ,
ஒரு டேபிள், கூடையில் உணவு, ஸ்வீடன், சமூக விலகல், வரவேற்பு

சமூக விலகலை கருத்தில் கொண்டு ஸ்வீடன் நாட்டின் வேர்ம்லாந்தில் டேபிள் ஃபார் ஒன் என்ற பெயரில் ஓட்டல் திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு மேசை, நாற்காலி மட்டுமே போடப்பட்டிருக்கும். அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவு சாப்பிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓட்டலில் சப்ளையர் கிடையாது. கயிறு ஒன்றில் பிக்னிக் கூடை கட்டப்பட்டு அதில் உணவு வைத்து மேசைக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் சிறிய முன்னுதாரணமாக விளங்குவது இந்த ‘டேபிள் பார் ஒன் ஓட்டல் என்றால் மிகையில்லை. இந்த ஓட்டலை நடத்துபவர்கள் ஸ்வீடனை சேர்ந்த ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன் தம்பதி. இதுதொடர்பாக பெர்சன் கூறியதாவது:

a table,food in the basket,sweden,social exclusion,welcome ,
ஒரு டேபிள், கூடையில் உணவு, ஸ்வீடன், சமூக விலகல், வரவேற்பு

இந்த ஓட்டலை உருவாக்கும் எண்ணம் வருவதற்குக் முக்கிய காரணம் என் மனைவியின் பெற்றோரே. தினமும் அவர்களுக்கு ஜன்னல் வழியாக உணவை வழங்கியதன் விளைவாகவே இந்த ஓட்டல் உருவானது.

தனிமையில் அமர்ந்து உணவுக்காகக் காத்திருந்து உணவு சாப்பிடுவதை இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் ரசிக்கின்றனர் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

Tags :
|