Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் இந்த தேதி பெற்றுக்கொள்ளலாம் .... உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் இந்த தேதி பெற்றுக்கொள்ளலாம் .... உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

By: vaithegi Mon, 09 Jan 2023 6:09:04 PM

ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் இந்த தேதி பெற்றுக்கொள்ளலாம்   ....   உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ஜனவரி 16 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் ..... 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதனை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க ரூ.2,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பொங்கல் தொகுப்பை எந்தவித சிரமமின்றி வழங்க கடந்த 3-ம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்கி வந்தனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கி வந்த நிலையில், நேற்றுடன் பொங்கல் டோக்கன் கொடுக்கும் பணி நிறைவடைந்தது.

food department,pongal gift collection,pongal ,உணவுத்துறை ,பொங்கல் பரிசுத் தொகுப்பு ,பொங்கல்

இந்த நிலையில், இன்று 9-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று முதல் வருகிற 13ம் தேதி அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இக்குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகை முடிந்ததை அடுத்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :