Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவிப்பு

ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Mon, 19 Dec 2022 6:46:24 PM

ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளது ..... தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி,பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்இதையடுத்து நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் பட்டை தீட்டிய அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அரிசியை தீட்டும் போது அதிலுள்ள சத்துக்கள் முழுவதும் வீணாகிறது. இதனால் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் பல்வேறு வித நோய்களுக்கும் ஆளாகின்றனர். இதை தடுக்கும் வகையில் உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

food supply department,ration shop ,உணவு வழங்கல் துறை ,ரேஷன் கடை

வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஆண்டை விட 3 முதல் 4 மடங்கு கூடுதலாக அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags :