Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Thu, 06 Aug 2020 10:43:15 AM

சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹார்பின். இங்கு தனியாருக்கு சொந்தமான உணவு பொருள் தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு அருகிலேயே உணவு பொருள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் உணவு பொருட்கள் சேகரித்து வைக்கப்படும்.

நேற்று முன்தினம் இந்த உணவு கிடங்கில் தொழிலாளர்கள் சிலர் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் உணவு கிடங்கு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

food warehouse,collapse,china,9 dead ,உணவுக் கிடங்கு ,இடிந்து விபத்து, சீனா, 9 பேர் இறப்பு

இந்த விபத்து குறித்து உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இருப்பினும், தொழிலாளர்கள் 9 பேரை இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக உணவு நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|