Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எளிமையாக நடந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயம்

எளிமையாக நடந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயம்

By: Karunakaran Tue, 16 June 2020 11:01:51 AM

எளிமையாக நடந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயம்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால், அங்குள்ள மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.

நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களின் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், மறைந்த கபே காபி-டே அதிபர் சித்தார்த்தின் மகனுமான அமர்த்யாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

dk sivakkumar,karnataka,engagement,aiswarya,congress leader ,கர்நாட கா,டி.கே.சிவக்குமார, காங்கிரஸ் தலைவர்,  திருமண நிச்சயம்

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் இந்த திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில், டி.கே.சிவக்குமாரின் நண்பர்கள், குடும்பத்தினர், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

வரும் டிசம்பர் மாதம் ஐஸ்வர்யா-அமர்த்யா நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், டி.கே.சிவக்குமாரின் மகளின் திருமணம் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்றது. சமீபத்தில் கொரோனாவுக்கு மத்தியில் கர்நாடக சுகாதார மந்திரி மகளின் திருமணம் 500 கோடி செலவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :