Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை ... சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை ... சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கம்

By: vaithegi Sun, 23 Oct 2022 09:19:09 AM

தீபாவளி பண்டிகை   ...   சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து தொழில், வியாபாரம், கல்வி என பல்வேறு தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையை சார்ந்து அவர்கள் இருக்கிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றி வசித்து வரும் வெளியூர்வாசிகள் பெரும்பாலானோர் பண்டிகைகளை தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

மேலும் இந்த பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாட நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து கொண்டு வருகிறார்கள்.ரெயில்கள், ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், விமானங்கள் என்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

special buses,diwali ,சிறப்பு பஸ்கள்,தீபாவளி

தீபாவளியையொட்டி, நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 772 அரசு பஸ்களில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதவிர ரெயில்கள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்களில் என ஒட்டு மொத்தமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் வெளியூர்களில் இருந்து மிகவும் குறைவானவர்களே சென்னைக்கு வருகை தந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் என்பதால் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சொந்த கார்கள், 'கால் டாக்சி'களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இதனால் வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து பரனூர் சுங்கச்சாவடி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :