Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பக்ரைனுக்கும் நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது

முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பக்ரைனுக்கும் நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது

By: Karunakaran Thu, 24 Sept 2020 4:43:16 PM

முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பக்ரைனுக்கும் நேரடி விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டது

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன. அதன்பின், அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் கடந்த 15 ஆம் தேதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

first time,direct flights,israel,bahrain ,முதல் முறை, நேரடி விமானங்கள், இஸ்ரேல், பஹ்ரைன்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப்போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பக்ரைன் நாட்டிற்கு நேற்று முதல் நேரடி விமானப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் விமானப்போக்குவரத்து பக்ரைன் நாட்டுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட உதவும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கும் பக்ரைன் நாட்டிற்கும் இடையே முதல் முறையாக நேரடி விமானப்போக்குவரத்து நடைபெற்றுள்ள நிகழ்வு மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
|