Advertisement

மதுரை கோர்ட்டில் முதல்முறை... பெண் சோப்தார் நியமனம்

By: Nagaraj Tue, 06 Dec 2022 10:24:27 AM

மதுரை கோர்ட்டில் முதல்முறை... பெண் சோப்தார் நியமனம்

மதுரை: உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வரை அவர்களுக்கு முன்பாக சோப்தார் என்பவர் செல்வது வழக்கம். இவர் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்திய படியும் இருப்பார்கள்.

இவர்கள் தேவையான சட்ட புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகள் எடுத்துச் செல்வது என நீதிபதிகளின் அன்றாட பணிகளுக்கு உதவிகள் செய்கின்றனர். இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் சார்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு காலியாக இருந்த சோப்தார் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

madurai female,female sophtars,examination,court,written examination ,மதுரை பெண், பெண் சோப்தார்கள், தேர்வு, கோர்ட், எழுத்து தேர்வு

இதில் முதல்முறையாக 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து முதல் சோப்தாராக திலானி என்ற பெண் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து லலிதா என்பவர் மதுரை கிளையில் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவரின் சொந்த ஊரும் மதுரைதான். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tags :
|