Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் முதல்முறை... இந்து பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாகிறார்

பாகிஸ்தானில் முதல்முறை... இந்து பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாகிறார்

By: Nagaraj Fri, 29 July 2022 11:25:19 PM

பாகிஸ்தானில் முதல்முறை... இந்து பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாகிறார்

இஸ்லாமாபாத்: முதல்முறை... பாகிஸ்தானில் இந்து மத பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாக பதவி ஏற்கிறார்.


பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் மனிஷா ரூபேட்டா என்பவர் பிறந்தார். இவர் இந்து மத குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், மனிஷா மற்றும் அவருடைய 3 சகோதரிகள் 1 தம்பியை அவருடைய தாயார் படிக்க வைத்தார்.


இந்நிலையில் மனிஷாவின் 3 சகோதரிகளும் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கும் நிலையில், அவருடைய தம்பியும் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இதேபோன்று மனிஷாவும் மருத்துவம் படிப்பதற்காக நுழைவு தேர்வு எழுதியுள்ளார்.

first time,pakistan,hindu female,dsp.,inducted ,முதல்முறை, பாகிஸ்தான், இந்து பெண், டிஎஸ்பி., பதவியேற்பு

ஆனால் 1 மதிப்பெண் குறைந்ததால் மனிஷாவுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத மனிஷா போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தேர்வு செய்து உயர் பதவிக்கான தேர்வை எழுதினார்.


இந்த தேர்வில் வெற்றி பெற்று 16-வது இடத்தை பிடித்தார். இதன் காரணமாக சிந்து மாகாணத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வாகியுள்ளார். இவர் தற்போது பயிற்சியில் இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்பது இதுவே முதல் முறையாகும்.

Tags :
|