Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முதன்முறையாக கிராம உதவியாளராக திருநங்கை நியமனம்

தமிழகத்தில் முதன்முறையாக கிராம உதவியாளராக திருநங்கை நியமனம்

By: Nagaraj Fri, 13 Jan 2023 7:13:32 PM

தமிழகத்தில் முதன்முறையாக கிராம உதவியாளராக திருநங்கை நியமனம்

தூத்துக்குடி: கிராம உதவியாளராக திருநங்கை நியமனம்... தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கை கிராம உதவியாளருக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

சமீபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்ற திருநங்கை தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் கிராம உதவியாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர்தான்.

assistant,collector,transgender,village, ,ஆட்சியர், செந்தில்ராஜ், திருநங்கைகள், வெள்ளிக்கிழமை

அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலகரந்தி கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் கே.செந்தில் ராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மாரிமுத்து, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :