Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய சுதந்திரத்திற்கு பின் முதல்முறை: இந்திய தூதரக தலைவராக பெண் பொறுப்பேற்பு

இந்திய சுதந்திரத்திற்கு பின் முதல்முறை: இந்திய தூதரக தலைவராக பெண் பொறுப்பேற்பு

By: Nagaraj Tue, 29 Aug 2023 6:46:32 PM

இந்திய சுதந்திரத்திற்கு பின் முதல்முறை: இந்திய தூதரக தலைவராக பெண் பொறுப்பேற்பு

புதுடில்லி: முதல்முறை... இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 2019 ஆண்டு இந்தியா ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் அரசு, தனது இந்திய தூதரை வாபஸ் பெற்றது. பதிலுக்கு இந்தியாவும் பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றது.

first time,pakistan,consul,female,joint secretary ,முதல்முறை, பாகிஸ்தான், தூதர், பெண், இணைச் செயலாளர்

இந்நிலையில், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு சாத் அஹ்மத் வாராய்ச்சை தூதரகமாக நியமித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். கீதிகா ஸ்ரீவஸ்தவா இதற்கு முன் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|