Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் குற்றவாளிக்கு ஜும் செயலி வாயிலாக தூக்கு தண்டனை விதிப்பு

சிங்கப்பூரில் குற்றவாளிக்கு ஜும் செயலி வாயிலாக தூக்கு தண்டனை விதிப்பு

By: Nagaraj Wed, 20 May 2020 3:13:16 PM

சிங்கப்பூரில் குற்றவாளிக்கு ஜும் செயலி வாயிலாக தூக்கு தண்டனை விதிப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு, ‛ஜூம் ' செயலி மூலம் தூக்கு தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வரலாற்றில் வீடியோ கான்பரன்சிங் முறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை. மலேசியாவை சேர்ந்தவர் புனிதன் கணேசன் (37). இவர், 2011ம் ஆண்டு ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

zoom processor,singapore,drug,case,judgment ,
ஜும் செயலி, சிங்கப்பூர், போதைப்பொருள், வழக்கு, தீர்ப்பு

இதனால் நீதிமன்ற பணிகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடக்கிறது. அந்த வகையில் புனிதன் கணேசன் வழக்கும் விசாரிக்கப்பட்டது. பின்னர் ஜூம் செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் கூறியதாவது;

விசாரணையில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு கருதி வழக்கு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. கிரிமினல் வழக்கில் இப்படி தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கணேசனின் வக்கீல் கூறுகையில், ஜூம் செயலி மூலம் கணேசனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். முன்பே விசாரணை முடிந்துவிட்டதால், தண்டனை விவரம் மட்டும் ஜூம் செயலி மூலம் அறிவிக்கப்பட்டது என்றார்.

Tags :
|
|