Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த மாத ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களுக்கு கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டிப்பு

கடந்த மாத ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களுக்கு கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டிப்பு

By: Nagaraj Fri, 03 July 2020 4:02:17 PM

கடந்த மாத ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களுக்கு கால  அவகாசம் 10ம் தேதி வரை நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு... ஜுன் மாதம் ரேஷனில் இலவச பொருட்கள் பெறாதவர்கள் வரும் 10ம் தேதி வரை பெற்றுக் கொள்ளும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.

ration goods,free,time off,extension,minister ,ரேஷன் பொருட்கள், இலவசம், கால அவகாசம், நீட்டிப்பு, அமைச்சர்

ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது. அதே போல, ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள மே 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மக்களின் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் இலவச பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாத இலவச பொருட்களை வாங்கத் தவறிய மக்களுக்கு ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு கடுமையாக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Tags :
|