Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடியக்கரை சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தாளிகள்

கோடியக்கரை சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தாளிகள்

By: Nagaraj Mon, 05 Oct 2020 7:08:58 PM

கோடியக்கரை சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தாளிகள்

வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு விருந்தாளிகள்.

ஈராக், ஈரான், சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பிளமிங்கோ ( பூ நாரை) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிகளவு காணப்படும். கொசுஉள்ளான், சிவப்புகால் உள்ளான், வரித்தலை வாத்து, கூழக்கிடா மற்றும் உள்நாட்டுப் பறவைகளான செங்கால் நாரை, கடல் காகம் என 200க்கும் அதிகமான பறவை வகைகள் இங்கு படையெடுத்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

exotic birds,sanctuary,kodiakkara,visit ,வெளிநாட்டு பறவைகள், சரணாலயம், கோடியக்கரை, வருகை

இங்கு வரும் பெரும்பாலான பறவைகள், இங்கேயே முட்டையிட்டு குஞ்சு பொரித்து தனது குடும்பத்துடன் சொந்த நாடு திரும்புகின்றன.

கோடியக்கரையில் பறவைகள் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் தளர்வுகள் அளித்து விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரங்கால் பல்வேறு தடைகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகை தர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :