Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 73-வது பிறந்தநாளில் 73 சொத்துக்களை சேர்த்துள்ள பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்

73-வது பிறந்தநாளில் 73 சொத்துக்களை சேர்த்துள்ள பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்

By: Karunakaran Fri, 12 June 2020 09:17:01 AM

73-வது பிறந்தநாளில் 73 சொத்துக்களை சேர்த்துள்ள பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவராவார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் இவரை கைது செய்யப்பட்டு, ஜார்க்கண்ட் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு இறுதியில் பீகார் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜூன் 7-ம் தேதி உள்துறை மந்திரி அமித்ஷா ஆன்லைன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. - ஜக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனால் அவர் பா.ஜ.க. - ஜக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் கடுமையான குற்றம்சாட்டினார்.

bihar,lalu prasad,chief minister,assets , பீகார்,முதல் மந்திரி,லாலு பிரசாத்,சொத்து,

இந்நிலையில் நேற்று லாலு பிரசாத் யாதவ் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவரது கட்சி தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதில் தலைநகர் பாட்னாவில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேனரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி 73 சொத்துக்களை சேர்த்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றின் மதிப்பு விவரங்களை பட்டியலிடப்பட்டு இருந்தது. இந்த பேனரில் லாலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.73 வயதில் 73 சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துப்பட்டியல் மேலும் நீளும் என்று கிண்டலடிக்கும் வகையில் இருந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
|