Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை

By: Nagaraj Sun, 16 Oct 2022 10:01:28 PM

பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துப்பாக்கிதாரிகள் திடீரென அவரை நோக்கி சூப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.


இதில் பலத்த காயமடைந்த நீதிபதியை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

banking system,major verdict,warning,shooting,judge ,வங்கி முறை, முக்கிய தீர்ப்பு, எச்சரிக்கை, சுட்டுக் கொலை, நீதிபதி

நீதிபதியின் மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதியின் சேவை மறக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் தேசத்தை அச்சுறுத்த முடியாது என்றும் பலுசிஸ்தான் முதல்வர் எச்சரித்துள்ளார்.

ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை சுட்டுக்கொலை செய்யப்பட்ட நீதிபதி மெஸ்கன்சாய் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Tags :