Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி விருப்பப்படியே அரசு மரியாதையின்றி இன்று உடல் நல்லடக்கம்

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி விருப்பப்படியே அரசு மரியாதையின்றி இன்று உடல் நல்லடக்கம்

By: Nagaraj Thu, 20 July 2023 08:52:11 AM

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி விருப்பப்படியே அரசு மரியாதையின்றி இன்று உடல் நல்லடக்கம்

கேரளா: கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி விருப்பப்படி அவரின் உடல் அரசு மரியாதையின்றி நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உம்மன் சாண்டியின் குடும்பத்தார் அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலை, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என கேரள அரசு திட்டமிட்டிருந்தது.

எனினும், உம்மன் சாண்டியின் விருப்பம் என்ன என்பதை குடும்பத்தினர் தெரிவித்ததால், இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை தலைமைச் செயலாளரிடம் அமைச்சரவை ஒப்படைத்தது.

oman sandi,physical restraint,new school house,government respect ,உம்மன் சாண்டி, உடல் நல்லடக்கம், புதுப்பள்ளி வீடு, அரசு மரியாதை

இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, சாதாரண மனிதரைப் போன்று தன்னுடைய இறுதிமரியாதை இருக்க வேண்டும் என உம்மன் சாண்டி குடும்பத்தாரிடம் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இறுதியில் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க, அரசு மரியாதையின்றி உம்மன் சாண்டியின் உடலை நல்லடக்கம் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

உம்மன் சாண்டியின் சொந்த ஊரான திருவனந்தபுரத்திலுள்ள புதுப்பள்ளி வீட்டில் அவரின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு பல்வேறு தலைவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று வியாழக்கிழமை மதியம் புதுப்பள்ளியில் உம்மன் சாண்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :